Header Ads

தற்கொலை' நோக்கத்தினால் மலேசிய விமானம் மோத செய்யப்பட்டுள்ளது இங்கிலாந்து செய்தித்தாள்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்ட விமானம், கடந்த 8–ந் தேதி அதிகாலையில் திடீரென்று மாயமானது.
17 நாட்களுக்கு பிறகு 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியது என்று மலேசிய பிரதமர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். பயணிகள் யாரும் உயிருடன் இல்லை என்று மலேசியா அறிவித்தது. மேலும், தேடுதல் பணியினை நிறுத்தப்பட்டது என்று தெரிவித்தது.

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த செய்தித்தாள் ஒன்று வெளிப்படையாக விமானத்தை மோத செய்தது திட்டமிட்டு 'தற்கொலை' நோக்கில் செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளது. 'டெய்லி டெலிகிராப்' என்ற செய்தித்தாள் உயர்மட்ட தகவல்களை கொண்டு இது 'தற்கொலை' நோக்கில்தான் கடலில் மோத செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

விமானிக்கு விமான விபத்தில் தொடர்பு இல்லை என்று மலேசியன் அரசு தெரிவித்துவருவது எதிர்மறையாக உள்ளது என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தின் விமானி தற்கொலை செய்திருக்கலாம் என்று செய்தித் தகவல்கள் வெளியாகிய நிலையில், மலேசிய விசாரணை அதிகாரிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ பிடித்து வெடித்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இவ்விவகாரத்தில் மலேசிய அரசின் அறிவிப்பு முரண்பாடாக உள்ளது என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.