அஜித்தின் அன்புக்கட்டளை
கல்லூரி மாணவனாக நடிக்க மாட்டேன் என்ற கூறி வருகிறாராம் அஜித்.
அல்டிமேட் ஸ்டார் அஜித் மங்காத்தாவில் இருந்து தனது வயதுக்கு பொருத்தமான கதாபாத்திரங்களாகவே நடித்து வருகிறார்.
அதோடு, தங்கள் வயதை சீக்ரெட்டாக சிலர் மறைத்து வைத்திருக்கும் வேளையில், அஜித்தோ, தனது நிஜ வயதை ஓப்பனாக சொல்லியே நடிக்கிறார். அவரது இந்த யதார்த்தத்தை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு டைரக்டர் அவரிடம் கதை சொன்னபோது, அவரை கல்லூரி பையனாக நடிக்க வேண்டும் என்றாராம்.
ஆனால் அவரோ, அந்த மாதிரி சீனெல்லாம் வைக்காதீர்கள். எனக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதை மட்டும் செய்யுங்கள் என்று கூறி விட்டாராம்.
அதனால் அஜித்தை இயக்கவிருக்கும் கெளதம் மேனன்கூட, அவர் விரும்பத்தகாத சில காட்சிகளை இப்போதே கத்தரித்து ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கிறாராம்.
No comments: