மலேசிய விமானம் மாயம்: அமெரிக்க தகவலுக்கு மலேசியா மறுப்பு
மலேசிய விமானம் ரேடாரில் இருந்து மாயமான பிறகு 4 மணிநேரம் வானில் பறந்ததாகவும், பிறகு அது ஏதோ ஒரு அடையாளம் தெரியாத இடத்திற்கு திருப்பி விடப்பட்டிருப்பதாகவும், இதனால் விமானம் கடத்தப்பட்டு எங்கோ ஒரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.
இந்த தகவலை அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் நாளிதழ் வெளியிட்டது. இந்நிலையில், மலேசியாவின் போக்குவரத்து மந்திரி ஹசாமுதின் ஹுசைன் இதனை மறுத்துள்ளார்.
மேலும் “விமானம் தொடர்பிழந்த பிறகும் பறந்ததாக கூறப்படுவதற்கு எவ்வித தொழிநுட்ப தகவல்களும் அமெரிக்காவிடம் இல்லை. வால் ஸ்டீரீட் நாளிதழின் செய்தி தவறானது.” என்றும் கூறினார்.
No comments: