மதுரை டீக்கடையில் மோடியின் உரையாடல் ஒளிபரப்பு
நாடு முழுவதும் நரேந்திர மோடியின் உரையாடல் காட்சியை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒளிபரப்ப பாரதிய ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று மாலை இவ்வுரையாடல் காட்சி ஒளிபரப்பப்பட்டது. தமிழகத்திலும் பல மாவட்டங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
மதுரையில் பை–பாஸ் ரோடு, புதூர், பழங்காநத்தம் பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் ஒளிபரப்ப பா.ஜ.க.வினர் செய்து இருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மாவட்ட முன்னாள் தலைவர் ராஜரத்தினம், நிர்வாகிகள் அருணாசலம், பாலுமகேந்திரன், மணிகண்டன், ஜெகதீசன், ரவி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்காக போலீசில் முறைப்படி அனுமதி கேட்டனர். ஆனால் பழங்காநத்தம் பகுதியில் மட்டும் அனுமதி வழங்கிய போலீசார் மற்ற 2 இடங்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து நமோ பேரவை மாவட்ட செயலாளர் செல்வம் கூறும் போது, மோடியின் உரையாடல் காட்சியை 3 இடங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்து அனுமதி கேட்டோம். ஆனால் ஒரு இடத்திற்கு மட்டும் தந்து விட்டு புதூர், பை–பாஸ் ரோடு ஆகிய 2 இடங்களில் ஒளிபரப்ப அனுமதி மறுத்துள்ளனர்.
இது குறித்து போலீசில் கேட்டால் கூடுதல் தேர்தல் அதிகாரி கேட்டு கொண்டதற்கிணங்க அனுமதி மறுப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மோடியின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்பதால் மத்திய அரசின் தூண்டுதலின்பேரில் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளது வேதனை அளிக்கிறது என்றார்.
மேலும் நேற்று மாலை டீக்கடைக்கு மோடியின் உரையாடலை கேட்க சென்ற பொதுமக்களுக்கு இலவசமாக டீ வழங்கப்பட்டது.
No comments: