Header Ads

மாவீரர்களின் பெயரை பிள்ளைகளுக்கு வைத்து மாவீரர்களை கௌரவித்த தலைவர் பிரபாகரன் -

தேசியத்தலைவர் பிரபாகரன் மதிவதனி தம்பதியினருக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். மூத்த மகனின் பெயர் சார்ள்ஸ் அன்டனி. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், தலைவர் பிரபாகரனின் நெருங்கிய சகாவும், யாழ்பாணத்தில் ஸ்ரீலங்காப் படையினருடனான தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டவருமான சார்ள்ஸ் அன்டனி சீலனின் ஞாபகமாகவே இந்தப் பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது.
சார்ள்ஸ் அன்டனி என்பது ஒரு கிறிஸ்தவப் பெயர். சார்ஸ்ஸ் அன்டனி கிழக்கைச் சேர்ந்த ஒரு போராளி. போராட்டத்தின் போது வீரத்தையும், தேசிய விசுவாசத்தையும் வெளிப்படுத்திய அந்தப் போராளியின் ஞாபகமாக பிரபாகரன் தம்பதியினர் அந்தப் பெயரை தனது மூத்த புதல்வனுக்குச் சூட்டியிருந்தார்கள்.
துவாரகா
தேசியத்தலைவர் பிரபாகரன்-மதிவதனி தம்பதியின் இரண்டாவது பிள்ளையின் பெயர் துவாரகா. இதுவும் ஒரு போராளியின் பெயர்தான். மதிவதினி அவர்களின் மெய்ப்பாதுகாவலராக இருந்த ஒரு பெண் போராளிதான் துவாரகா. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு சண்டையில் இந்தப் போராளி வீரச்சாவைத் தழுவியிருந்தார். அவரின் ஞாபகமாகவே தமது குழந்தைக்கு துவாரகா என்ற பெயரை சூட்டியிருந்தார்கள்.
பாலச்சந்திரன்
தலைவர் பிரபாகரன் அவர்களது மனைவி மதிவதனி அவர்களின் தம்பியின் பெயர் பாலச்சந்திரன். அவரும் ஒரு போராளிதான். இந்தியப் படையின் காலத்தில் இந்தியப் படையின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகக் களமிறங்கி சூரசம்காரம் செய்த பல போராளிகளுள் அவரும் ஒருவர்.
தலைவர் பிரபாகரன் அவர்களுடைய குடும்பம் இந்தியப் படையினருடனான சண்டையின் போது பாலச்சந்திரனை இழக்கவேண்டி ஏற்பட்டது. வன்னியில் இடம்பெற்ற ஒரு சண்டையில் பாலச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். இந்தப் போராளியின் ஞாபகமாகவே பிரபாகரன்-மதிவதனி தம்பதியினருக்குப் பிறந்த மூன்றாவது குழந்தைக்கு பாலச்சந்திரன் என்று பெயர் சூட்டப்பட்டது. பாலச்சந்திரன் என்ற நபர் மதிவதனியின் தம்பி என்பதற்காக அல்ல- பாலச்சந்திரன் ஒரு போராளி என்பதற்காகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வீரமரணமடைந்த போராளிகளை கௌரவப்படுத்தும் புலிகளின் தலைவர் மிகவும் கவனமாகக் கடைப்பிடித்து வந்தார். தனது அனைத்துக் குழந்தைகளுக்கும் மரணித்த போராளிகளின் பெயர்களைச் சூட்டுவதன் மூலம் வீரமரணமடைந்த போராளிகளை கௌரவப்படுத்தியிருந்தார்.
விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக மரணித்த போராளியின் ஞாபகமாக மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்திருந்தார். வருடாவருடம் மாவீரர் தினத்தன்று போராட்டத்தில் மரணித்த அத்தனை போராளிகளையும் தமிழ் உலகமே நன்றியுடன் நினைவுகூறும்படி செய்திருந்தார்.

No comments:

Powered by Blogger.