Header Ads

அந்தமான் பகுதியில் மலேசிய விமானமா? புது தகவலால் பரபரப்பு

239 பேருடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயம், காணாமல் போன விமானம் பற்றிய புதிய தகவல்களை மலேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
காணாமல் போன மலேசிய விமானத்தின் சிதைவுகளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சீனா மூன்று புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.

அத்துடன், கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த பின்னரும் விமானம் நான்கு மணித்தியாலங்கள் பறந்ததாகத் தெரிகிறதென அமெரிக்க பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இவையிரண்டும் தவறானவையென மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூசைன் தெரிவித்தார்.

சீனா தவறுதலாக படங்களை வெளியிட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார். விமானத்தின் எஞ்சினை உற்பத்தி செய்த ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது, அமெரிக்காவின் தகவல் தவறானதென தெரியவந்ததாக அவர் கூறினார்.

இந்திய பெருங்கடலுக்கு மாற்றம்

மலேசிய விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலின் அடியில் விமானம் இருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததன் அடிப்படையில் தேடுதல் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அந்தமான் பகுதிக்கு சென்றதா?

மாயமான மலேசிய விமானம் அந்தமான் தீவுகள் பகுதியை நோக்கி பயணித்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

239 பேருடன் கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமான விமானத்தை தேடும் பணிகள் இன்று 7வது நாளாக தொடர்கிறது.

12 நாடுகள் விமானங்களையும், கப்பல்களையும், செயற்கைக்கோள்களையும் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தியும் எவ்வித பலனும் இல்லை.

இந்நிலையில் விமானம் குறித்து தினமும் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி இந்தியப் பெருங்கடல் வரையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அந்தமான் கடல் பகுதிக்கு கப்பலை அனுப்பியுள்ளது.

கடற்படையின் நெடுந்தொலைவு ரேடார் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய வகையில் உள்ள பி-3சி ஓரியன் கண்காணிப்பு விமானம் மூலம் அமெரிக்கா அந்தமான் கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணியினை தொடங்கவுள்ளது.

முழு தகவல்களுக்கு



Malaysia plane: China debris images 'not connected'

Chinese satellite pictures of debris in the South China Sea are not connected to the missing Malaysian airliner, Malaysia's transport minister says.

Hishammuddin Hussein also denied a US report that Flight MH370 might have flown for hours after contact was lost.

Chinese state TV is still treating the pictures as relevant and says a warship is continuing to hunt for the debris.

The plane went missing early on Saturday with 239 people on board. The search now includes the Indian Ocean.

The minister said the disappearance of the Boeing 777-200ER aircraft was unprecedented.

Mr Hussein told reporters at Kuala Lumpur International Airport that the Chinese embassy in the Malaysian capital had said the satellite images were released by mistake and "did not show any debris from MH370".

The grainy satellite images were released by China's State Administration of Science on Wednesday.

Despite the denial, state TV in China says a warship is continuing to search for the debris spotted in the South China Sea.

One commentator dismissed Mr Hussein's comments, and the report said China would continue to analyse new satellite images.

No comments:

Powered by Blogger.