Header Ads

மலேசியன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது

கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு செல்லும் வழியில் வானில் மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் விமானம் வியட்நாமில் உள்ள தோ சு தீவில் ப விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 227 பயணிகள் உட்பட 239 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சீனாவிலிருந்து 2 மீட்புக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. விமானத்தில் 154 சீனர்கள் உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.விபத்தில் சிக்கிய விமானத்தில் 5 இந்தியர்கள் பயணித்துள்ளது உறுதியாகியுள்ளதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்

75 ஹெலிகாப்டர்கள் விரைவு:

பயணிகள் விமான விபத்து குறித்து மலேசிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்து நடைபெற்ற பகுதிக்கு 75 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் விபத்தில் சிக்கிய பயணிகள் யாரேனும் உயிருடன் இருக்கின்றனரா என தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் சென்ற விமானம் மாயமாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை எம்.எச் 370 விமானம் இழந்தது.மாயமான விமானத்தை தேடும் பணியில் சர்வதேச விமான ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டது. விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் வியட்நாம் வான்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தது.

விமானம் மாயமானது எப்படி?

கோலாலம்பூரில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 2.40க்கு விமானம் புறப்பட்டது. 4 மணி நேர பயணத்துக்குப் பின் காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் சென்றிருக்க வேண்டும். ஆனால் விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் போயிங் விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்தது. பயணிகளின் உறவினர்கள் விமானம் பற்றிய தகவல்களை +60378841234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.  

No comments:

Powered by Blogger.