கோவை இரட்டை கொலை வழக்கு பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற டிரைவருக்கு தூக்கு; ஐகோர்ட் உறுதி
சென்னை: கோவையில் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 குழந்தைகள், பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது கடத்தப்பட்டனர். அதில், 10 வயது சிறுமி முஷ்கின் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்டார். இந்த கொலை மற்றும் பலாத்காரத்திற்கு சாட்சியாக இருந்த அவளது 7 வயது தம்பி ரித்திக் கொலை செய்யப் பட்டான். இந்த கொலை வழக்கில் கால் டாக்சி டிரைவர் மனோகரன் அவரது நண்பரான டிராக்டர் டிரைவர் மோகனகிருஷ்ணன் ஆகி யோர் கைது செய்யப்பட்ட னர். பின்னர், இவர்களை வேனில் ஏற்றி அழைத்துச் செல்லும் போது, மோகன கிருஷ்ணன், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதனால் அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதை தொடர்ந்து டிரைவர் மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கை கோவை மகளிர் நீதி மன்றம் விசாரித்து மனோ கரனுக்கு தூக்கு தண் டனை விதித்தது. இதை எதிர்த்து மனோகரன், சென்னை உயர் நீதிமன்றத் தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பில், ‘பள்ளிக்கு சென்ற சிறுமி, சிறுவனை கடத்தி கொடூரமாக கொலை செய்துள்ளது தெளிவாக போலீஸ் தரப்பில் நிரூபிக்கப்பட் டுள்ளது. எனவே மனோ கரனுக்கு தூக்கு தண்டனையை, மகளிர் நீதிமன்றம் விதித்தது சரியானது தான். எனவே அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனோகர னுக்கு விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்கிறோம் என்றனர்.
No comments: