திருச்சி தி.மு.க. மாநாட்டில் 3 பேர் மரணம்
திருச்சியில் நடந்த தி.மு.க. 10-வது மாநில மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தி.மு.க.வினர் கார், வேன், பஸ்களில் வந்து கலந்து கொண்டனர். இதில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த நடராஜன் (வயது 59) மாநாட்டு திடலுக்கு வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.
இதே போல் கரூர் தாந்தோன்றிமலையை சேர்ந்த கிருஷ்ணன் (55), தர்மபுரி மாவட்டம் ஸ்ரீகரகூரை சேர்ந்த காமராஜ் (50) ஆகியோரும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.
காமராஜ் மாநாட்டு திடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் இருந்தபடியே மரணம் அடைந்தார்.

No comments: