Header Ads

பைனான்ஸ் அதிபர் வீட்டின் கதவை உடைத்து ரூ.75 லட்சம் நகை கொள்ளை காதலனுடன் மருத்துவ மாணவி கைது

சென்னை : காஞ்சிபுரம் பைனான்ஸ் அதிபர் வீட்டில் ரூ.75 லட்சம் மதிப்பு நகைகள் கொள்ளையடித்த, மருத்துவ கல்லூரி மாணவியையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மேட்டு தெரு எம்.எம்.அவென்யூவில் வசிப்பவர் ஜெயக்குமார் (58). பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். எம்.எம். ஓட்டலில் பங்குதாரராகவும் உள்ளார். உறவினரின் திருமணத்துக்கு செல்வதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன், வங்கி லாக்கரில் வைத்திருந்த வைரம் மற்றும் தங்க நகைகளை வீட்டுக்கு கொண்டு வந்தார். நகைகளை பீரோ மற்றும் கபோர்ட்டில் வைத்து இருந்தார்.கடந்த 10ம் தேதி குடும்பத்துடன் ஜெயக்குமார் ஷாப்பிங் சென்றார். இரவு வீடு திரும்பியபோது வீட்டின் வெளிக்கதவு, உள்கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றுபார்த்தபோது, படுக்கையறை கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.75 லட்சம் மதிப்பு வைர, தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து விஷ்ணு காஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

கொள்ளையர்களை பிடிக்க ஐஜி மஞ்சுநாத், டிஐஜி சத்தியமூர்த்தி, எஸ்பி விஜயகுமார், காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி சண்முகம், டிஎஸ்பிக்கள் பாலச்சந்திரன், கண்ணன், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, எஸ்ஐக்கள் டீக்காராம், மாதவன், ஜெயக்குமார், மூர்த்தி, ஆறுமுகம், காவலர்கள் சீனிவாசன், சக்கரவர்த்தி, ரகு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார், ஜெயக்குமாரின் உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்தனர். மேலும் ஜெயக்குமார் வீட்டில் குடியிருப்பவர்கள், பேப்பர் போடுபவர், பால்காரர், பூட்டு சாவி தயாரிப்பவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தினர்.ஜெயக்குமார் வீட்டு மாடியில், காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படித்துவரும், ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த மாணவி சவுமியா (21) தங்கியிருந் தார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 2 ஆண்டாக, ஜெயக்குமார் வீட்டில் சவுமியா வாடகைக்கு வசிக்கிறார். ஜெயக்குமாரின் குடும்பத்தினருடன் சவுமியா நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் , ஜெயக்குமார் குடும்பத்தினர் வெளியே செல்லும்போது வீட்டு சாவியை சவுமியாவிடம் கொடுத்து செல்வது வழக்கம். இதன்படி சம்பவத்தன்று சாவியை சவுமியாவிடம், கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். இதன்பிறகு சவுமியா,  கல்லூரி நண்பர் மணிகண்டனுடன் சேர்ந்து கதவை திறந்துவிட்டு, அவரை வீட்டின் உள்ளே அனுப்பியுள்ளார். மணிகண்டன்  நகைகளை கொள்ளையடித்தார்.இவ்வாறு விசாரணை யில் தெரியவந்துள்ளது.இதையடுத்து மணிகண்டன், சவுமியாவை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 133 சவரன் நகைகள், 4 வைர நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு கார், 5 செல்போன்களையும் கைப்பற்ற¤யுள்ளனர். 

பைனான்ஸ் அதிபர் வீட்டில் ரூ.75 லட்சம் நகைகளை காதலனுடன் சேர்ந்து மருத்துவ கல்லூரி மாணவி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சவுமியா மற்றும் மணிகண்டனிடம் இருந்து ஒரு பனியன் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், அதிகளவில் வயர்கள் இருந்தன. அந்த பனியனை போட்டு கொண்டு, பரீட்சை அறையில் தேர்வு எழுதும்போது, வெளியில் இருந்து மைக்ரோ போன் மூலம் பதில் கூறுவதை, இந்த பனியனில் உள்ள ஹெட்செட் மூலம் கேட்டு பரீட்சை எழுதலாம். வசூல்ராஜா எம்பிபிஸ் மாதிரி, மணிகண்டன் எம்பிபிஎஸ் எழுத தயாரித்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த தேர்வின்போது, மணிகண்டன் தேர்வு அதிகாரிகளிடம் சிக்கினார். இதனால், அவரை தேர்வு அறையில் இருந்து வெளியேற்றினர். இதை பார்த்த சவுமியாவும் உடனடியாக வெளியேறினார்.


சவுமியாவின் முன்அனுபவம்

எம்எம் அவென்யூ பகுதியில் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் வீட்டு வாடகை குறைந்தது ரூ.25 ஆயிரம். சவுமியா கல்லூரி மாணவி என்பதால், அவருக்கு ரூ.10 ஆயிரத்தில் வாடகைக்கு வீட்டை கொடுத்துள்ளனர்.ஏற்கனவே ஒருமுறை சவுமியா, ஜெயக்குமார் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். ஆனால், பீரோ மற்றும் கபோர்டு லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால், எலக்ட்ரிக் கட்டர் புதிதாக வாங்கி, அதன் மூலம் நகைகளை  கொள்ளையடித்துள்ளார்.

கிப்ட் பாக்சில் நகை

ஜெயக்குமார் குடும்பத்தினர் வெளியே செல்லும்போது வீட்டுச்சாவியை சவுமியாவிடம் கொடுத்து செல்வர். இதன்மூலம் பீரோ மற்றும் கபோர்டை உடைத்து நகைகளை திருடி காரில் வைத்துக்கொண்டு தாங்கள் படித்துவரும் கல்லூரிக்கு பின்புறம் சென்றுள்ளனர். அங்குள்ள ஏரியில் நகை பெட்டிகளை, கடப்பாரையால் உடைத்து நகையை எடுத்து கொண்டனர். பின்னர், நகை பெட்டி, கடப்பாரையை ஏரியில் வீசியுள்ளனர். அனைத்து நகைகளையும் ஒரு பெட்டியில் போட்டு கிப்ட் பாக்ஸ் போல் செய்துள்ளனர். அந்த பாக்ஸை கல்லூரி தோழி ஒருவரிடம் கொடுத்து வைத்துள்ளனர்.

காதலன் படிப்புக்காக கொள்ளைசவுமியாவின் தந்தை பவானியில் மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்தி வருகிறார். மணிகண்டனின் தந்தை ரியல் எஸ்டேட் அதிபர். சவுமியா, மணிகண்டன் காதலர்கள். மணிகண்டன் நிறைய பாடத்தில் அரியர்ஸ் வைத்துள்ளார். அவருக்கு கல்லூரி கட்டணம் கட்டவும், படிக்கவும் பணம் தேவைப்பட்டது. குறிப்பாக தேர்வில் ‘சேஸ்’ செய்வதற்கு ஒரு தாளுக்கு 1.50 லட்சம் தேவை, 10 பேப்பருக்கு 15 லட்சம் தேவைப்பட்டதால் இந்த கொள்ளையில் சவுமியா ஈடுபட்டார் என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.