Header Ads

பெங்களூரில் ரஜினியை காண திரண்ட ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் நான்கு தினங்களுக்கு முன் கர்நாடகா சென்றார். ரசிகர்கள் கூடுவதை தவிர்க்க இரவு நேரங்களில் நெருக்கமான நண்பர்கள் வீடுகளுக்கு சென்றார்.

கர்நாடக வீட்டு வசதி துறை மந்திரியும், நடிகருமான அம்பரீஷ் ராஜ்பகதூர், நடிகர் துவாரகேஷ் போன்றோரின் வீடுகளுக்கு சென்று அவர்களை சந்தித்து பேசினார். நீண்ட நேரம் அவர்களிடம் உரையாடினார்.

இதேபோல் இரவு நேரங்களில் அங்குள்ள கோவில்களுக்கும் சென்று சாமி கும்பிட்டார். பசவனகுடியில் உள்ள தொட்டகணபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கவிபுரம் கவிகங்கா தேஷ்வரக கோவிலுக்கும் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

ரஜினி பெங்களூரில் தங்கி இருக்கும் தகவல் எப்படியோ வெளியாகி விட்டது.

பெங்களூரில் உள்ள கோல்பி அபார்ட்மென்ட்டில் ரஜினி தங்கி இருப்பதாக அறிந்து அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ரஜினியை பார்க்க முண்டியடித்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

ரஜினி திடீரென பால்கனிக்கு வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து உடனேயே அங்கிருந்து சென்றுவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அங்கு கூட்டம் அதிகம் திரண்டதால் பின்வாசல் வழியாக வெளியேறினார். இதையடுத்து ரசிகர்கள் ரஜினி தனது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட் வீட்டுக்கு சென்று இருப்பார் என்று கருதி அங்கு சென்றார்கள். ஆனால் ரஜினி சகோதரர் வீட்டுக்கு போகாமல் விமான நிலையம் அருகில் உள்ள நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

No comments:

Powered by Blogger.