Header Ads

பெண்களின் மனம் கவர்ந்த நாயகனுக்கு இன்று பிறந்தநாள்......

நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
மெரினா படத்தில் நடிகராக அறிமுகமான இவர் அடுத்தடுத்து மரம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.
இவர் நடித்து கடந்த வருடம் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் 100 நாட்களைக் கடந்து ஓடியதுடன் வசூலிலும் சக்கை போடு போட்டது.
தற்போது இவர் ஹன்சிகாவுடன் நடித்துவரும் ஹன்சிகாவுடன் நடித்துவரும் மான்கராத்தே படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் இன்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

No comments:

Powered by Blogger.