Header Ads

டுவிட்டரில் இணைந்தார் சினேகா

தமிழ் மற்றும் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் டுவிட்டர் என்ற சமூக இணையதளத்தில் இணைந்து, தாங்கள் நடிக்கும் படங்கள் சம்பந்தமான அறிவிப்புகள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட பிரபலங்கள்தான் இன்னும் இந்த சமூக வலைத்தளத்தில் இணையாமல் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த 2012-ம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்ட சினேகா தற்போது டுவிட்டர் இணையதளத்தில் இணைந்துள்ளார். நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்து டுவிட் செய்துள்ளார். 

அந்த டுவிட்டில், 'சினேகா டுவிட்டரில் இணைந்துள்ளார். இந்த உலகம் எவ்வளவு இனிமையானது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்’ என்று சினேகாவின் டுவிட்டர் முகவரியோடு குறிப்பிட்டு இருக்கிறார். 

சினேகாவின் டுவிட்டர் தளத்தில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். இதுகுறித்து சினேகா கூறும்போது, ‘மிகக் குறுகிய நேரத்திலேயே இத்தனை பேர் என்னுடைய தளத்தை பின்தொடர்வார்கள் என்று நினைக்கவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கிடைத்த வரவேற்புக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Powered by Blogger.