Header Ads

திரிஷ்யம்’ படம் ரீமேக்: கமலுடன் ஜோடி சேர போட்டிபோடும் நடிகைகள்

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ.50 கோடிக்கு மேல் வசூலையும் ஈட்டியது. இப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடக்கிறது.

தமிழ் ரீமேக்கில் கமலஹாசனும், தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசும் நடிக்கின்றனர். இந்தியிலும் இப்படம் தயாராகிறது. மோகன்லால் கேரக்டரில் அக்ஷய்குமார் நடிப்பார் என தெரிகிறது.

மலையாளத்தில் நடித்த மீனாவையே தமிழிலும் கமல் ஜோடியாக நடிக்க வைக்க பரிசீலித்தனர். இருவரும் ஏற்கனவே அவ்வை சண்முகி படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். பிறகு நதியாவும் பரிசீலிக்கப்பட்டார். கமலும் நதியாவும் இணைந்து படங்களில் இதுவரை நடிக்கவில்லை. இருவரில் ஒருவர் ஜோடியாவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சிம்ரன் பெயரும் அடிபடுகிறது. கமலும், சிம்ரனும் ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘பஞ்ச தந்திரம்’ படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

சிம்ரன் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீப காலமாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை. கமலுடன் நடித்து இன்னொரு ரவுண்ட் வர விரும்புவதாக கூறப்படுகிறது.

No comments:

Powered by Blogger.