பி.வாசு இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய்
பி.வாசு இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கிறார். குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் சார்பாக கே.ரமேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக இது உருவாகிறது. ‘வட இந்தியாவில் உள்ள மலைப் பிரதேசங்களிலும், கம்போடியா நாட்டிலும் இதன் ஷூட்டிங் நடக்க உள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக ஐஸ்வர்யா ராய் சிறப்புப் பயிற்சி மேற்கொள்ள உள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இதில் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்க, இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.

No comments: