Header Ads

திருமண மண்டபத்தில் பரபரப்பு மாப்பிள்ளையின் அண்ணன் அடித்ததால் மணப்பெண் போலீசில் புகார்

ஊத்துக்கோட்டை: மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணப்பெண் கூறியதால் ஊத்துக்கோட்டையில் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்றது. மாப்பிள்ளையின் அண்ணன் தன்னை அடித்தார் என்று மணப்பெண் புகார் கூறினார். அவரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். மாயமான மாப்பிள்ளையை தேடுகின்றனர். ஊத்துக்கோட்டையில் நாகலாபுரம் சாலையில் வசிப்பவர் சுப்ரமணி. இவரது மகன் சண்முகம். இவருக்கும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாசுகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமிக்கும் இன்று காலை 7.30 மணிக்கு ஊத்துக்கோட்டையில் ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. மணமக்கள் நேற்று மாலையில் மண்டபத்துக்கு வந்தனர். மணப்பெண் ஜெயலட்சுமி சோகமாக இருந்தார்.அவர் இன்று காலை 7 மணிக்கு திடீரென ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையம் வந்து, எனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்றார். அவர் கூறுகையில், ÔÔதிருமணம் பிடிக்காததால் மண்டபத்தில் அழுது கொண்டு இருந்தேன். மாப்பிள்ளையின் அண்ணன் நரசிம்மன் இன்று காலையில் என்னை அடித்தார்ÕÕ என்றார். 

உடனே மணமகனை அழைத்து வரும்படி எஸ்.ஐ. பாரதியிடம் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் கூறினார். போலீசார் சென்றபோது மண்டபத்தில் மாப்பிள்ளை இல்லை. அவர் மாயமாகிவிட்டார். அவர் அரக்கோணம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அவரை பிடிக்க போலீசார் அரக்கோணம் விரைந்துள்ளனர். மண்டபத்தில் இருந்த மாப்பிள்ளை யின் அண்ணன் நரசிம்மன், தந்தை சுப்ரமணி ஆகியோரை போலீசார் பிடித்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. திருமணம் நின்றதால் மண்டபம் காலியானது. திருமணத்துக்கு வந்தவர்கள் போலீஸ் நிலையம் முன்திரண்டதால் பரபரப்பு நிலவியது. மணப்பெண் ஜெயலட்சுமியை போலீசார் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Powered by Blogger.