Header Ads

நடிகை லிசியுடன் விவாகரத்தா?: டைரக்டர் பிரியதர்ஷன்

பிரபல மலையாள நடிகை லிசி. தமிழில் கமலுடன் விக்ரம் படத்திலும், மனசுக்குள் மத்தாப்பூ, பகலில் பவுர்ணமி, ஆனந்த ஆராதனை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

லிசியும், பிரபல மலையாள டைரக்டர் பிரியதர்ஷனும் 1990-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும், சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் குடும்பத்தோடு வசிக்கிறார்கள்.

லிசிக்கும், பிரியதர்ஷனுக்கும் தற்போது திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் பரவி உள்ளன. விவாகரத்துக்காக தனக்கு ரூ.80 கோடி ஜீவனாம்சம் வேண்டும் என்று லிசி கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரியதர்ஷனிடம் கேட்டபோது மறுத்தார். இதுகுறித்து அவர் கூறும்போது,

எல்லா வீடுகளிலும் நடப்பதுபோல் எங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் நடப்பது சகஜம்தான். இதற்காக நாங்கள் விவாகரத்து செய்து கொள்ளப்போகிறோம் என்று கூறுவது தவறானது. என்னிடம் பணம் கேட்டதாக வந்துள்ள செய்திகளிலும் உண்மை இல்லை. என்னிடம் எதையும் கேட்கவில்லை. பிரச்சினைகள் சரி செய்யப்படுகின்றன. விவாகரத்தெல்லாம் இல்லை என்றார்.

No comments:

Powered by Blogger.