Header Ads

சிறப்புத் தோற்றத்தில் விஜய்

துப்பாக்கி ரீமேக்கில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம் விஜய்.
தமிழில் சுக்கிரன், பந்தயம் போன்ற படங்களிலும், இந்தியில் பிரபுதேவாவின் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த ‘ரவுடி ரத்தோர்’என்ற படத்தில் ஒரு பாடலில் தோன்றி நடனமாடியிருக்கும் விஜய், தற்போது மீண்டும் அக்ஷய் குமாருடன் ஒரு படத்தில் இணைகிறார்.

விஜய் நடிப்பில் தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற ‘துப்பாக்கி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘ஹாலிடே’ படத்தை இயக்குவதும் ஏ.ஆர்.முருகதாஸ்தான்.

தனக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்த ஏ.ஆர்.முருகதாஸுக்காவும், அக்ஷய் குமாரின் நட்புக்காகவும் ‘ஹாலிடே’ படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய்.

அவர் என்ன வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

No comments:

Powered by Blogger.