Header Ads

அஞ்சுகிராமம் அருகே ஆட்டோவுக்குள் பள்ளி மாணவியுடன் டிரைவர் சில்மிஷம்: பொதுமக்கள் தர்ம அடி

அஞ்சுகிராமம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் படிக்கும் 10–ம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று மதியம் திடீரென பள்ளியில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் சிறிது தூரம் நடந்து சென்றபோது ஒரு ஆட்டோ அருகில் வந்து நின்றது. அந்த ஆட்டோவில் மாணவி ஏறியதும் ஆட்டோ புறப்பட்டுச் சென்றது.

அந்த பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்துக்கு சென்றதும் ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர், மாணவி அருகில் அமர்ந்து கொண்டார். இருவரும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் முத்தமிட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் ஒதுக்குப்புறமாக ஆட்டோ நின்றதால் சந்தேகப்பட்டு அருகில் சென்று பார்த்தனர். அப்போது பள்ளி சீருடையில் மாணவியுடன் ஆட்டோ டிரைவர் லீலையில் ஈடுபட்டு இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் அந்த ஆட்டோ டிரைவரை கீழே இழுத்து போட்டு தர்மஅடி கொடுத்தனர்.

இதை பார்த்து அந்த மாணவி பயத்தில் அலறினார். அதன்பிறகு இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த மாணவியையும், ஆட்டோ டிரைவரையும் போலீஸ்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் அந்த மாணவி தன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று கதறி அழுதார்.

டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் சுசீந்திரம் போலீஸ்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அந்த மாணவியின் உறவினர் வீடு நாகர்கோவில் பகுதி உள்ளது. அவர்களை பார்ப்பதற்காக அந்த மாணவி நாகர்கோவில் வந்தபோது ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர், மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். மேலும் அந்த மாணவிக்கு புத்தாடை வாங்கி கொடுப்பதற்காக நேற்று அழைத்துச் சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

மாணவியின் எதிர்காலம் கருதி அவரை போலீசார் கடுமையாக எச்சரித்து விடுவித்தனர். அந்த ஆட்டோ டிரைவர் மீது வேறு சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதான ஆட்டோ டிரைவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.