Header Ads

தாடி, மீசையுடன் வலம் வரும் இளம்பெண்..... ஒரு பாய்பிரண்ட் கூட கிடைக்கலையாம்!.....video

பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆணாக மாற முடியாமலும், பெண்ணாக வாழ முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறார்.

பிரித்தானியாவின் பெர்க்ஷையர் நகரில் வசித்து வருபவர் கர்னாம் கவுர்(வயது 23). 11 வயதாக இருந்த போது பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம் என்ற நோய் தாக்கியதில் முகத்தில் முடி முளைக்க தொடங்கியது.

பள்ளிக்கு சென்றபோது சக மாணவிகள் கேலி செய்தனர், இதனால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தபடியே படிக்கத் தொடங்கினார்.

முகம் மட்டுமின்றி பின்னர் கை, கால், மார்பு போன்ற உடலின் அனைத்து பகுதிகளிலும் முடி முளைத்ததால் பெரும் அவதிக்குள்ளானார்.

வாரத்திற்கு இருமுறை ஷேவிங் செய்து முடிகளை அகற்றுவதிலேயே இவருக்கு பெரும் வேலையாக இருந்தது, ஆனால் ஒரு கட்டத்தில் இவர் ஷேவிங் செய்வதை நிறுத்திவிட்டார்.

கடவுள் நமக்கு அளித்த வரம் இது, இதை எதற்காக எதிர்த்து போராட வேண்டும் என முடிவு செய்து சீக்கியர்கள் போல முடியை முழுவதும் வளர்க்க தொடங்கிவிட்டார்.

இவருடைய பெற்றோர்களும், சகோதரரும் இவருடைய முடிவிற்கு ஆதரவு அளித்தனர். ஆனால் இவருக்கு இதுவரை ஒரு பாய்பிரண்ட் கூட கிடைக்கவில்லை என்பதுதான் இவருடைய ஒரே ஏக்கமாம்.

தானும் சராசரி பெண் தான் என்றும், தன்னை பார்க்கும் ஆண்கள் எல்லாம் விலகிச் செல்கின்றனர் எனவும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.