கணவரை தேடித் திரியும் நயன்தாராவின் “நீ எங்கே என் அன்பே” டிரைலர்......video
தமிழில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நீ எங்கே என் அன்பே திரைப்படம் இந்தியில் வித்யா பாலன் நடித்த கஹானி படத்தின் ரீமேக்காகும். ஆரம்பம், ராஜா ராணி வெற்றிக்கு பிறகு வெளிவரும் நயன்தாரா நடித்துள்ள இப்படத்தை சேகர் கமுல்லா இயக்கியுள்ளார்.
ஐதராபாத் நகரில் தனது காணாமல் போன கணவரை தேடும் நயன்தாரா, பொலிசின் ஒத்துழைப்பின்றி எவ்வாறு அவரது கணவரை கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை.
இந்தியில் பலரது பாராட்டுக்களை பெற்ற படத்தின் ரீமேக் என்பதால் நீ எங்கே என் அன்பே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments: