Header Ads

இங்கிலாந்தில் கொலை மிரட்டல் புகாரால் கைதாகி விடுதலையான 2 வாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன்..

இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் பகுதியில் வசித்து வருபவர் முகமது பாதுஷாமேன்.  இவருக்கு வயது 34.  பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும் இவரது மனைவி சபீன் தாண்டி (வயது 37).  இந்த பெற்றோருக்கு 3 குழந்தைகள்.  

கடந்த நவம்பர் 2012ம் ஆண்டில் இவர்கள் இருவரும் சந்தித்து கொண்டனர்.  அதன் பின் 2 மாதங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.  சபீனை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய முகமது திருமணத்திற்கு பின் அவரை ஹிஜாப் அணியும்படி வற்புறுத்தியுள்ளார்.  

வரவேற்பாளர்

இந்நிலையில், தற்பொழுது சபீன் கர்ப்பமாக உள்ளார்.  ஆனால், சபீன் வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக கருதிய முகமது தனது மனைவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார் என தனக்கு தெரியாத நிலை ஏற்பட்டதை அறிந்து ஆவேசமடைந்து உள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.  மருத்துவர் ஒருவரின் வரவேற்பாளராக பணிபுரிந்த சபீன் அதற்காக கிளம்பி பயணம் செய்யும்போதும் அவரை முகமது பின் தொடர்ந்துள்ளார்.

தனது கணவர் மீதான பயம் மற்றும் தனது குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றை குறித்து சபீன் அச்சமடைந்தார்.  இதற்கிடையே, சபீனுடைய வீட்டை தனக்கு சொந்தமானது என கூறி வீட்டு தரகர் ஒருவரை அழைத்து வந்து அதனை விற்க முயற்சி செய்துள்ளார் முகமது.

கணவர் தன்னை அதிகமாக கட்டுப்படுத்துவதை வெறுத்த சபீன் வாட்போர்டு நகர வக்கீல்களை சந்தித்து கடந்த ஜூன் மாதம் விவாகரத்து கோரியுள்ளார்.

நீதிமன்றம் தீர்ப்பு

இதனை அடுத்து ஜூன் 17ந்தேதி முகமதுவுக்கு எதிராக வாட்போர்டு நகர நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை பிறப்பித்தது.  மனைவியின் வீட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்து வழங்கப்பட்ட தீர்ப்பை இரு தினங்கள் கழித்து, உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி முகமது தனது மனைவி சபீனை துன்புறுத்தியுள்ளார்.  அப்படி செய்யவில்லை என்றால் மகனை உயிருடன் பார்க்க முடியாது என சபீனை முகமது மிரட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து சபீனின் வக்கீல்கள் போலீசாரிடம் முகமது மீது புகார் தெரிவித்தனர்.  மிரட்டல் விடுத்த முகமது போலீசாரால் கைது செய்யப்பட்டான்.  ஆனால் பின்னர் அவன் அதிக விச்சாரணையின்றி விடுவிக்கப்பட்டான்.  போலீஸ் அதிகாரிகளின் அலட்சிய போக்கான் நடவடிக்கைக்கு பின்பு அந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

மர்ம தொலைபேசி அழைப்பு

கடந்த வருடம் ஜூலை 7ந்தேதி போலீசாருக்கு மர்ம நபரிடமிருந்து தொலைபேசி தகவல் சென்றுள்ளது.  அவர்கள் சபீன் வசித்து வந்த பாரஸ்ட் கேட் வீட்டிற்கு சென்று கதவை தட்டினர்.  கதவை திறந்த முகமது, சபீன் வேலைக்கு சென்றுள்ளார் என கூறியுள்ளான்.  போலீசார் உள்ளே சென்று தேடி பார்க்கையில், படுக்கை அறையில் சபீன் இறந்து கிடந்துள்ளார்.

போலீஸ் அதிகாரிகளிடம் விச்சாரணை

நியூஹாம் மருத்துவமனையில் மரணம் உறுதி செய்யப்பட்டு, பிரேத பரிசோதனை முடிந்தது.  அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக அதன் அறிக்கை தெரிவித்தது.  இந்த சோக சம்பவத்தால் 3 குழந்தைகள் தனது அன்பான தாயை இழந்து விட்டதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்று உள்ளதாகவும், பல்வேறு தரப்பட்ட தனி நபர்களின் சாட்சியம் பெறப்பட்டு உள்ளதாகவும், அந்த குடும்பத்தில் நடப்பவற்றை குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் உயர் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செய்த குற்றத்தை ஒப்பு கொண்டதை அடுத்து காவலில் வைக்கப்பட்டு உள்ள முகமதுவுக்கு வருகிற மே 27ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

No comments:

Powered by Blogger.