Header Ads

விஜயசேதுபதியிடம் அடிவாங்கி பிரபலமான சித்தார்த் விபின்!

இசையமைப்பாளர்களெல்லாம் ஹீரோக்களாகிக்கொண்டிருக்கும் காலம் இது. விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் அடுத்து இடம் பிடித்திருக்கும் இன்னொரு இசையமைப்பாளர்தான் சித்தார்த் விபின். விஜயசேதுபதி நடித்த இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். ஆனால், இப்போது இளவட்டங்களெல்லாம் கொண்டாடும் நடிகராகி விட்டார்.

அந்த படத்தில் நந்திதாவின் ப்ரண்டாக நடித்திருந்த சித்தார்த், ஒரு காட்சியில் நந்திதாவின் வீட்டிற்கு வந்திருப்பார். அதைப்பார்த்து விடும் விஜயசேதுபதி டென்சனாகி விடுவார். தான் சின்ன வயதிலிருந்தே ரூட் விட்டு வரும் பொண்ணை இவன் ரூட் விடுவதா? என்று சித்தார்த்திடம் மோதுவார். அப்போது அவரை அடித்து துவம்சம் செய்கிற தோனியில் போஸ் கொடுக்கும் சித்தார்த், இந்த சண்டை காட்சியை இதயம் பலவீனமானவங்க, 18 வயசுக்கு கீழ் உள்ளவங்க யாரும் பாக்கதீங்க என்று சொல்லிவிட்டு திரும்புவார். அதற்குள் இந்த தயிர்சாதம் என்ன அடிக்கப்போவுதா என்று சொல்லி சித்தார்த் விபினை புரட்டி எடுத்து, சட்டையையெல்லாம் கிழித்தெறிந்து ஓட்டம் பிடிக்க வைப்பார் விஜயசேதுபதி.

அப்படி ஒரே சீனில் பிரபலமான சித்தார்த் விபின், இப்போது தான் இசையமைத்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த வேடமும் முந்தைய படத்தை போலவே என்னை பேச வைக்கும் என்று சொல்லும் அவர், எனக்கு இசையமைப்பதை போலவே நடிப்பதிலும் ஆர்வம் அதிகம். அதனால்தான் நான் இசையமைக்கும் பட டைரக்டர்களிடம் எனக்கேற்ற காமெடி ரோல்களாக கேட்டு வாங்கி நடிக்கிறேன் என்கிறார் சித்தார்த்.

ஆக, இப்போது ட்ரெய்ல் பார்க்கும் சித்தார்த் விபினும், கூடியசீக்கிரமே ஹீரோ வேசம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments:

Powered by Blogger.