Header Ads

இலியானாவை கைது செய்த மும்பை போலீசார்!

அனைத்து தென்னிந்திய நடிகைகளுக்குமே மும்பை சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பதுதான் பெரிய கனவாக இருக்கும். அந்தவகையில், அசின், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் அங்கு கொடிகட்டிப் பறப்பதைப்பார்த்த இலியானாவும் தற்போது இந்தியில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார்.

அதற்காக, தென்னிந்திய படங்களில் நடித்ததை விடவும் உச்சகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி நடிப்பதற்கும் அங்குள்ள டைரக்டர்களுக்கு உத்தரவாதம் கொடுத்து நடித்து வரும் இலியானா, தற்போது வருண்தவானுக்கு ஜோடியாக மெயின் தேரோ ஹீரோ -என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் அப்படம் திரைக்கு வர இருப்பதால், வருண்தவானுடன் சேர்ந்து தானும் அப்படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் இலியானா.

இந்த நிலையில், போலி வாகனத்தட்டு பொருத்திய காரில் இலியானா பயணித்தபோது அவரையும், அவருடன் சென்றவர்களையும் நேற்று முன்தினம் மும்பை போலீசார் கைது செய்தார்களாம். அதையடுத்து உடனடியாக இலியானா விடுவிக்கப்பட்டபோதும், இந்த செய்தி மும்பை வட்டாரத்தை கலக்கி விட்டதாம். ஆக, இதுவரை அந்த படத்திற்காக மும்பையிலுள்ள முக்கிய ஏரியாக்களில் வருண்தவான், இலியானா இருவரும் செய்து வந்த பப்ளிசிட்டியை விட இது பெரும் பப்ளிசிட்டியாகி உள்ளதாம்.

No comments:

Powered by Blogger.