Header Ads

எனது வாழ்க்கை வரலாறு திரைப்படமானால் மகிழ்ச்சி அடைவேன் நடிகை பிரியங்கா சோப்ரா சுவாரஸ்யம்

தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும், அதே சமயம் தகுந்த நேரத்தில் அதை திரைப்படமாக்க விரும்புவதாகவும் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்தார்.

நடிகை பிரியங்கா சோப்ரா

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டியின்போது, உங்களது சுயசரிதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டால், அதுபற்றிய உங்களது கருத்து என்னவாக இருக்கும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நடிகை பிரியங்கா சோப்ரா சுவாரஸ்யமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:–

சாதிக்க நிறைய இருக்கிறது

என் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் தயாரானால், நான் வாழ்வில் உயர்ந்தவளாகி விட்டேன் என்று அர்த்தம். ஆனாலும், என் சுயசரிதையை திரைப்படமாக்கும் அளவுக்கு நான் இன்னமும் எதுவும் சாதிக்கவில்லை. நான் இன்னும் சாதிப்பதற்கு நிறைய இருக்கிறது. அது 40 வயதிலும் நிறைவேறலாம். நான் என்னவெல்லாம் விரும்புகிறேனோ அதை 40–வது வயதுக்குள் சாதித்து இருப்பேன். அதன்பின், என் சுயசரிதையை படமாக்கலாம்.

நான் இப்போது பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை வரலாற்றை மையமாக கொண்ட திரைப்படத்தில் பணியாற்றி வருகிறேன். படப்பிடிப்பு தளங்களில் மேரி கோம் என்னுடன் தான் இருக்கிறார். நான் நடிக்கும் காட்சிகளில் அவர் எவ்வாறெல்லாம் இருந்தார் என்பதை உணர்வுபூர்வமாக எனக்கு விளக்குகிறார். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு பிரியங்கா சோப்ரா தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.