முன்பின அறிமுகமில்லாதவர்கள் முத்தமிட்டு கொண்ட குறும்பட வீடியோ கோடிகணக்கானவர்கள் பார்த்து சாதனை
ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் தட்டியா பிலீவா இவர் ஒரு தன்னார்வ சினிமா தயாரிப்பாளர் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த்தவர். இவர் 3.28 நிமிடங்கள் ஓடக்கூடிய முதல் முத்தம் ( First Kiss) enRa ஒரு குறும்படத்தை தயாரித்து உள்ளார். இதில் சுமார் முன்பின் அறிமுகமில்லாத 20 பேர் முத்தமிடும் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
யுடியூம் இணையதளத்தில், இந்த வீடியோவை 8.25 கோடி பார்த்து உள்ளனர்.சோஷியல் இனையதளத்திலும் இதை ஏராளமான பேர் பார்த்து உள்ளனர்.
இந்த குறும்படம் எடுத்த தனது அனுபவங்கள் குறித்து தட்டியா கூறியதாவது:-
முதல் முத்தம் (first Kiss) என்ற தலைப்பில் என் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப்பில் எப்போதுமே ஒரு pooல்டர் இருக்கும். நானும் என் கணவர் ஆன்ட்ரூவும் பகிர்ந்துகொண்ட முத்தப் புகைப்படங்களை அதில் போட்டு வைத்திருப்பேன். எப்போதாவது ஓப்பன் பண்ணி அதைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
திடீரென ஒருநாள் ஆன்ட்ரூவிடம், 'முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களை முத்தமிட வைத்துப் படமாக்கினால் எப்படி இருக்கும்?’ என்று கேட்டேன். எனக்கு அது வித்தியாசமான கான்செப்ட்டாகப் பட்டது. கேமரா முன் எவ்வளவு ரொமான்டிக்கான ஆட்களாக இருந்தாலும் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் என்பதால், முதல்முறை முத்தமிடும்போது ஒரு சின்னத் தயக்கம் இருக்கும். அது உடைபட்டு காட்டாற்று வெள்ளமாய் முத்த மழை பொழியும் அந்த மணித்துளிகளைப் பதிவுசெய்ய ஆவலாக இருந்தது. ஆடை வடிவமைப்புத் தொழில் செய்யும் என் தோழி மெலிஸாவின் 'வ்ரென்’ கம்பெனிக்கான புது கான்செப்ட் ஐடியாவாக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவுசெய்து அவளிடம் சொன்னேன். அவள் டபுள் ஓகே சொன்னாள்.
வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த அமெரிக்காவின் 20 நபர்களைத் தேர்வுசெய்தோம். ஆர்வமான நபர்களை ஒன்றிணைத்து ஷூட்டிங்கை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு ஸ்டுடியோவில் நடத்தினோம். முன்பின் பார்த்துக்கொள்ளாத இருவர், இருவராக முத்தமிடச் சொன்னோம். ஆக்ஷன் சொன்ன அடுத்த கணம் அவர்களின் வெட்கம், தயக்கம், கூச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் பனித்திரைபோல் மெள்ள விலகி அப்படியே பிரவாகமாக உதட்டுடன் உதடு சேர்த்துக் கட்டியணைத்து இன்பத்தில் திளைப்பதை ஐந்து கேமராக்களால் படமாக்கினோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பல ஜோடிகளின் முத்தத்தை என்னால் பொறுமையாகப் பார்க்க இயலவில்லை. கண்களை மூடிக்கொண்டேன். அவ்வளவு ரொமான்டிக்காக இருந்தது. எனக்கு ஆன்ட்ரூவின் ஞாபகம் வந்துவிட்டது. என கூறினார்.

No comments: