Header Ads

சிரியாவில் மார்க்கெட்-மருத்துவமனை மீது விமான தாக்குதல்: 20 பேர் பலி


சிரியாவில் அதிபர் ஆசாத்தின் அரசுப் படைகளுக்கும், புரட்சிப் படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் உக்கிரமான சண்டையில் அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். புரட்சிப் படை வசம் உள்ள இடங்களில் அதிபரின் படை அடிக்கடி விமான தாக்குதல் நடத்தி வருகிறது. 

சட்டத்திற்கு புறம்பாகவும், கண்மூடித்தனமாகவும் விமானத் தாக்குதல் நடப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அரசு கூறுகிறது. 

இந்நிலையில், வடக்குப்பகுதியில் உள்ள வர்த்தக நகரமான அலெப்போவில் இன்று மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள ஒரு காய்கறி மார்க்கெட் மீதும், மருத்துவமனை அருகிலும் ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் கட்டிங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. 

அப்பகுதியில் இருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில், 2 குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உள்பட 20 பேர் இறந்தனர். இந்த தாக்குதல் படுகொலை என்று சிரிய புரட்சி பொது ஆணைக்குழு கண்டித்துள்ளது. 

டிசம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு அலெப்போ மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் நடந்த விமானத் தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.