2வது திருமணம் செய்வதற்காக மனைவி, குழந்தையை கொலை செய்தேன். திடுக்கிடும் தகவல்
வறண்டு கிடந்த 30 அடி ஆழமுள்ள கிணற்றில் ஒரு பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. அருகிலிருந்த துணிப்பையில் 2 மாத பெண் சிசு இறந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அந்த பெண்ணின் அடையாளம் காணப்பட்டு, அவரது கணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம்:கிருஷ்ணகிரி, ஓசூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் செல்வம் மகள் ஜோதி (21).
இவர் சோகத்தூர் கட்டிட தொழிலாளி ஜீவா (24) வை காதலித்து இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இருவரும் தர்மபுரியில் தனிக்குடித்தனம் நடத்தினர். Tamil-Daily-News_9442211389கடந்த 2 மாதத்திற்கு முன் ஓசூர் அரசு மருத்துவமனையில் ஜோதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதிலிருந்து 2 மாதங்களாக பெற்றோர் வீட்டில் இருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜீவா, தர்மபுரி நியூ காலனியிலிருந்து பைக் ஒன்றை திருடிக்கொண்டு அதில் ஓசூரிலுள்ள மாமி யார் வீட்டிற்கு சென்றுள் ளார். தனக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க பெண் பார்ப்பதால் அதனை நிறுத்துவதற்காக
மனைவியை உடனே அனுப்பி வைக்குமாறு மாமியாரிடம் கூறி மனைவி ஜோதி மற்றும் குழந்தையை ஜீவா பைக்கில் ஏற்றி அழைத்து வந்ததுள்ளார். வஉசி நகர் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது பைக்கை நிறுத்திவிட்டு,
மனைவியை தாக்கி குண்டுக்கட்டாக தூக்கி அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீசியுள் ளார். பின்னர் கைக்குழந்தையையும் துணிப்பையில் வைத்து கொலை செய்து கிணற்றில் வீசி விட்டு சென்றுள்ளார்.
2 வது திருமணம் செய்வதற்கு இடையூறாக இருந்ததால் மனைவி, குழந்தையை கொலை செய்ததாக விசாரணையில் போலீ சாரிடம் ஜீவா தெரிவித்துள்ளார். அவரை போலீ சார் கைது செய்தனர்.
***மனைவியுடன் கள்ளத்தொடர்பு : சிறப்பு எஸ்ஐ மீது பரபரப்பு புகார்.
மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ள போலீஸ் சிறப்பு எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகை ஏஜன்ட் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை பெரியார் நகர் 70 அடி சாலை பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (49).
இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் சிறப்பு எஸ்ஐ மீது புகார் ஒன்று அளித்தார். பின்னர், வெளியே வந்த அவர் கூறியதாவது:
பெரியார் நகர் பகுதியில் பத்திரிகை ஏஜன்டாக உள்ளேன். 1984ம் ஆண்டு எனக்கும் தமிழ்ச்செல்வி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அவர் மூலம் எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர் இறந்து விட்டார்.
இதைதொடர்ந்து 2001ல் திருநெல்வேலி மாவட்டம், புலவன் குடியிருப்பை சேர்ந்த உறவுப்பெண் தங்க லலிதா என்பவரை திருமணம் செய்தேன். அவர் மூலம் 2 குழந்தைகள் பிறந்தன. சில ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு தொடர்பாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்துக்கு சென்றேன்.
அப்போது, அந்த காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரிந்தவரும், தற்போது, யானைகவுனி காவல் நிலைய குற்றப்பிரிவில் பணி செய்து வருபவருமான ரமேஷ் (45) என்பவர் என் வீட்டுக்கு வந்தார். அப்போது, எனது மனைவிக்கும், ரமேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறிவிட்டது.
இருவரும் எனது வீட்டிலேயே உல்லாசமாக இருக்க ஆரம்பித்தனர். கள்ளத்தொடர்பை கைவிடும்படி எனது மனைவியிடம் நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. சிறப்பு எஸ்ஐயும் என்னை மிரட்ட ஆரம்பித்தார். தற்போது, ஸீ60 லட்சம் மதிப்புள்ள எனது வீட்டை அபகரிக்க முயன்று வருகின்றனர். வீட்டுக்குள் என்னை நுழைய விடவில்லை.
இதனால், நான் தனியாக ஒரு அறை எடுத்து தங்கி உள்ளேன். எனவே, எனது வீட்டை மீட்டு என் மனைவியுடன் தவறான உறவு வைத்திருக்கும் சிறப்பு எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன். கமிஷனர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்
No comments: