சத்யம் தியேட்டர் கேண்டீனில் சிம்பு- நயன் தாரா. ரசிகர்கள் அதிர்ச்சி
சத்யம் தியேட்டர் வாசலில் சிம்பு படம் பார்க்க காத்திருப்பது போலவும், அப்போது நயன் தாரா வந்தவுடன் இருவரும் தியேட்டரின் கேண்டீனுக்கு செல்வது போலவும், பாண்டியராஜன் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டது.
பாண்டிராஜின் இயக்கத்தில் சிம்பு, நயன் தாரா, சூரி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை நயன் தாரா இல்லாமல் நடந்து கொண்டிருந்த இந்த படத்தின் ஷுட்டிங்கில் தற்போது நயன் தாராவும் கலந்துகொண்டதால் படப்பிடிப்பு விறுவிறுப்பு அடைந்துள்ளது.
இன்று காலை சிம்பு சத்யம் தியேட்டரில் வாசலில் ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்து சூரியுடன் வாசலில் நிற்பது போலவும், அப்போது நயன் தாரா வந்ததும், இருவரும் தியேட்டரின் கேண்டீனுக்கு செல்வது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு பற்றி முன் அறிவிப்பு ஏதும் இல்லாததால், படம் பார்க்க வந்த ரசிகர்கள் சிம்புவையும், நயன் தாராவையும் பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நயன் தாரா இந்த படத்திற்காக தொடர்ந்து 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். அதற்குள் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் பெரும்பாலானவை படமாக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.
No comments: