படப்பிடிப்பு நடந்த கிராமத்துக்கே உணவு பரிமாறிய அஜீத்
வீரம் படப்பிடிப்பு நடந்த ஒரு கிராமத்துக்கு இறுதியில் நடிகர் அஜீத் உணவு பரிமாறினார். கிராமத்தில் வசித்த ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று சாப்பிட்டனர். மெகாபந்தியாக இது இருந்தது என படக்குழுவினர் தெரிவித்தனர்.
விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி, தயாரிக்கும் இப்படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், விதார்த், பாலா போன்றோரும் உள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இதன் பெரும் காட்சிகள் ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் படமானது. இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்சினைகளே கதை. ஆரம்பத்தில் அமைதியாக வரும் அஜீத் பிறகு ஆவேசமாகி ஆக்சனுக்கு மாறுவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.
படத்தில் அஜீத் வேட்டி சட்டை அணிந்து வருகிறார். ஒரு காட்சியில் மாட்டு வண்டி ஓட்டி நடித்து இருக்கிறார். அந்த காட்சியில் மாடு வேமகாக போகாமல் முரண்டு பிடிக்க வண்டிக்காரர் மாட்டை சாட்டையால் அடித்துள்ளார். இதை பார்த்ததும் அஜீத்துக்கு கோபம் ஏற்பட்டது. உங்களுக்கு சாப்பாடு போடுவதே அந்த மாடு அதை போய் அடிக்கிறீர்களே என கண்டித்தார். விலங்குகள் மீதான அஜீத்தின் நேயத்தை படக்குழுவினர் பாராட் டினர்.
ரெயிலுக்குள் நடப்பது போன்ற சண்டைகாட்சி யொன்றை பின்னி மில்லில் ரூ.1 கோடி செலவில் ரெயில் அரங்கு அமைத்து படமாக்கியுள்ளனர். இந்த சண்டைகாட்சி பேசப்படும் என்கின்றனர்.
No comments: