நடிகைகளுக்கு பின்னால் அலையும் ரணில்!
தேர்தலில் போட்டியிடச் செய்ய நடிகர்கள், நடிகைகளை தேடுகின்றமையை தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வேறு வழி கிடையாது என ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்து உள்ளார்.
ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு பேசினார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் இக்காலத்தில் நடிகர்களையும், நடிகைகளையுமே அதிக அளவில் தேடித் திரிகின்றனர், உண்மையில் அதிக அளவில் நடிகைகளே தேடப்படுகின்றனர். தேர்தல் காலத்தில் யாரையேனும் தேடி, தேர்தலை வெற்றிப் பெறச் செய்து அவர்களை அரசாங்கத்துக்கு தாரை வார்க்கின்றமையே ஐக்கிய தேசியக் கட்சியின் வாடிக்கையாக மாறி உள்ளது என்று இவர் கூறி உள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு செய்ய வேறு வேலை எதுவும் கிடையாது என்றும் இவர் குறிப்பிட்டார்.
No comments: