கரும்புலி மேஜர் ரங்கனின் வீரவணக்க நாள்
கரும்புலி மேஜர் ரங்கனின் வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய்மண்ணின் விடியலுக்காக புயலான தேசத்தின்புயல் ரங்கன் நினைவான நினைவுப் பாடல் நாளடைவில் இணையங்களில் இருந்து அழிந்து போனது ஆயினும் சில உறவுகள் தங்கள் கைவசம் இம் மறவர்களின் காவியங்களை கையகப்படுத்தி பணத்தையும், புகழையும் எதிர்பார்த்து இவர்களின் காவியம் இன்றளவும் வெளிவிடாமல் தம்மிருப்பில் வைத்துள்ளார்கள் என்பதே வேதனையான விடையம்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்புபில் 05.12.1995 அன்று சிறீலங்கா விசேட அதிரடிப்படையின் முகாமை தகர்த்து வெற்றிக்கு வித்திட்டு புயலான கரும்புலி மேஜர் ரங்கன் அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ் குடாநாட்டை சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சிங்கக்கொடி ஏற்றிய சில மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இத் தாக்குதலில் வெற்றிக்கு அடித்தளமிட்ட அதிரடிப்படையின் படைத்தள வீழ்ச்சிக்காக தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு 25 மாவீரச்செல்வங்கள் கல்லறையில் உறங்குகின்றனர்.
|| தாய்மண்ணின் விடியலுக்காக புயலான தேசத்தின்புயல்…
தேசப்புயல் மேஜர் ரங்கனின் உயிரோட்டம்…
இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
No comments: