Header Ads

மாயமான பிறகும் 4 மணிநேரம் பறந்த மலேசிய விமானம்?

நியூயார்க்: மாயமான மலேசிய விமானம் ரேடாரில் இருந்து மாயமான பிறகும் 4 மணிநேரம் வானில் பறந்ததாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மலேசிய விமானம் MH370  239 பேருடன் கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது. கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய ஒரு மணிநேரத்தில் விமானம் மாயமானது. அந்த விமானம் விபத்துக்குள்ளானதா?, கடத்தப்பட்டதா? என்பது இப்போது  வரை தெரியவில்லை.

இந்நிலையில் அந்த விமானம் ரேடாரில் இருந்து மாயமான பிறகு 4 மணிநேரம் விண்ணில் பறந்ததாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக  செய்திகள்  தெரிவிக்கின்றன. 

No comments:

Powered by Blogger.