திருமண ஆசை காட்டி மாணவி கடத்தல்: பேஸ்புக் காதலன் கைது
திருப்பூர்: திருமண ஆசை காட்டி மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருப்பூர் பழவஞ்சிபாளையம் விக்னேஷ்வரா நகர் பகுதியை சேர்ந்த ஐடிஐ மாணவி ஷீலா (17, பெயர்மாற்றம்). கடந்த ஓராண்டுக்கு முன்பு பேஸ்புக்கில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபாஸ்டியன் ஆரோக்கியராஜ் (25) என்பவர் அறிமுகம் ஆனார். அவர்கள் நட்பு காதலாக மாறியது. மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். ஆனால் எதிர்ப்பை மீறி காதல் வளர்ந்தது.
கடந்த 26ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, திரும்பி வரவில்லை. அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடினர். இதில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை, ஜெபாஸ்டியன் ஆரோக்கியராஜ் தூத்துக்குடிக்கு கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்து சென்று மாணவியை மீட்டனர். மைனர் பெண்ணை கடத்திய ஜெபாஸ்டியன் ஆரோக்கியராஜை கைது
No comments: