அந்தமான் கடற்பகுதியிலும் மலேசிய விமானத்தை தேடும் பணி தீவிரம்
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி தற்போது சீன கடற்கரைப் பகுதிகளில் தொடங்கி அந்தமான கடற்கரை வரை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் விமானத்தை பற்றிய எவ்வித உறுதியான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
வியாட்நாம் நாட்டின் தெற்கு கடற்கரை முழுவதும் தேடும் பணி முடிந்துள்ள நிலையில் மலேசியா குழப்பமான தகவல்களை வெளியிட்டு வருவதாக குற்றஞ்சாட்டிய அந்நாடு தற்போது கிழக்கு கடற்கரை பகுதியிலும் நிலப்பகுதிகளிலும் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.
சீனாவும் தற்போது தனது நாட்டின் நிலப்பரப்புகளில் விமானத்தை தேடும் பணியை தொடங்கியுள்ளது.
மலேசிய கடற்கரையின் இரு புறத்திலும் 12-க்கும் மேற்பட்ட விமானங்களும் ஏராளமான கப்பல்களும் சுமார் 15000 சதுர மைல் தூரத்திற்கு தேடுதல் வேட்டையை முடித்துள்ள நிலையில் எவ்வித தகவலும் கிடைக்காததால் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
காணாமல் போன விமானம் கடைசியாக மலாக்கா ஜலசந்தி பகுதியில் காணப்பட்டதாக மலேசிய ராணுவம் தெரிவித்த தகவலும் சரியல்ல என கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்தமான கடற்கரை பகுதியிலும் தேடுதல் பணி நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது.
No comments: