Header Ads

மலேசியா விமானம் மாயமான விவகாரம் ... சீனா செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது....

பீஜிங்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த போயிங் விமானம் கடந்த 8ம் தேதி அதிகாலை தெற்கு சீன கடல் பகுதியில் மாயமானது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 239 பேர் பயணம் செய்தனர். அவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. மாயமான விமானத்தை கண்டுபிடிக்க மலேசியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் 39 விமானங்கள் மற்றும் 42 கப்பல்களை தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளன. விமானம் வியட்நாம் வான் பகுதியில் தெற்கு சீன கடலில் விழுந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. 

பின்னர் மலாக்கா கடல் பகுதியில், அந்த விமானம் கடைசியாக பறந்ததாக மலேசிய ராணுவம் தெரிவித்தது. இதையடுத்து அப்பகுதியில் கடந்த 5 நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அந்தமான் கடல் பகுதி வரை தேடும் பணியை விரிவு படுத்த மலேசியா முடிவு செய்தது. 

இந்நிலையில் வியட்நாமின் தெற்கு முனை மற்றும் மலேசியாவின் கிழக்கு பகுதிக்கு இடையில் கடந்த மார்ச் 9ம் தேதி காலையில் செயற்கைக்கோள் எடுத்த படங்களில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 3 பொருட்கள் மிதப்பது தெரியவந்துள்ளது. 

அது காணாமல் போன விமானத்தின் பாகங்களாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆயினும் இதுகுறித்து மலேசியா அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கவில்லை. 

No comments:

Powered by Blogger.