விஷாலின் பாண்டிய நாடு திரைப்படம் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விஷாலின் பாண்டிய நாடு திரைப்படம் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு படம் 25 நாட்கள் தொடர்ந்து ஓடினாலே அது வெற்றிப் படமாக கருதப்படுகிறது.
நிலைமை இப்படியிருக்க, ஒரு படம் 100 நாட்களை கடந்து ஓடினால் அது ஒரு சாதனை தான்.
அந்த சாதனையை புரிந்துள்ளது சுசீந்திரன் இயக்கத்தில், விஷால் - லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து வெளியான ‘பாண்டிய நாடு’ திரைப்படம்.
இந்தப் படத்திற்கு முன் விஷால் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் அவருக்கு கை கொடுக்காத நிலையில் பாண்டிய நாடு 100 நாட்களை கடந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்க, படு உற்சாகத்தில் இருக்கிறார்கள் விஷால் மற்றும் பாண்டியநாடு படக்குழுவினர்.

No comments: