Header Ads

மணமகனுக்கு தாலிகட்டிய மணப்பெண்: ருசிகர சம்பவம்

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணவிழாவில மணமகனுக்கு தாலிக்கட்டும் ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
நீடாமங்கலம் வெண்ணாறு லைன்கரை காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த துப்புரவுத் தொழி லாளிகளான சோமு-கல்யாணி தம்பதியின் மகள் வசந்திக்கும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரயில்வே சாலைரோடு பகுதியைச் சேர்ந்த பழனிநாயக்கன் - திலகவதி தம்பதியின் மகன் பி. சதீஸ் என்பவருக்கும் நீடாமங்கலத்தில் திருமணம் நடைபெற்றது.

முதலில் மணமக்கள் இருவரும் மாலையை மாற்றி அணிந்து கொண்டனர். அடுத்து மணமக ன் சதீஸ், மணமகள் வசந்திக் கலுத்தில் தாலிக் கட்டினார். இதையடுத்து சில விநாடிகளிலே யே மணமகள் வசந்தி, மணமகன் சதீஷ் கழுத்தில் தாலிக் கட்டினார்.

இச்சம்பவம் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

No comments:

Powered by Blogger.