Header Ads

அஜீத் படத்தில் அனுஷ்கா நடிப்பதில் சிக்கல்?

அஜீத் படத்தில் அனுஷ்கா நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதில் ஹீரோயினாக நடிக்க அனுஷ்கா தேர்வானார். அவர் இப்போது தெலுங்கில் ராணி ருத்ரம்மா தேவி, பஹுபாலி படங்களில் நடித்து வருகிறார். இரண்டுமே சரித்திர படங்கள். இந்த 2 படங்களுக்கும் தலா 200 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் அனுஷ்கா. இதனால் வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் இந்த இரண்டு படங்களில் மட¢டுமே கவனம் செலுத்துகிறார். இடையில் வந்த எந்த வாய்ப்பையும் அவர் ஏற்கவில்லை. இந்நிலையில் அஜீத் படம் என்பதாலும் அதிக சம்பளம் பேசப்பட்டதாலும் தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டார் அனுஷ்கா. 

ஆனால் இப்போது கால்ஷீட் ஒதுக்குவதில் அவருக்கு சிரமம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ராணி ருத்ரம்மா தேவி படத்துக்காக பெரும்பாலும் அவுட்டோரில் வெயிலில் நடித்து பொலிவு இழந்துள்ளாராம் அனுஷ்கா. அஜீத் படத்தில் அவருக்கு கவர்ச்சியான பப்ளி கேரக்டர் என்பதால் டைரக்டர் தரப்பும் இப்போது யோசிக்கிறதாம். 

அதே சமயம் இதில் அனுஷ்காவுக்கு பதில் தீபிகா படுகோன் நடித்தால் நன்றாக இருக்கும் என பட யூனிட்டில் ஒரு தரப்பு கருதுகிறதாம். ஹீரோயின் விஷயத்தில் அஜீத் எப்போதும் தலையிடுவதில்லை. அதனால் இந்த படத்துக்கு ஹீரோயின் பிரச்னை பெரியதாக அமையாது என்கிறது கோடம்பாக்க வட்டாரம் 

No comments:

Powered by Blogger.