Header Ads

சமயபுரத்தில் பயங்கரம் தாயின் கள்ளக்காதலனை குத்தி கொன்ற மகன்கள்

மண்ணச்சநல்லூர்: சமயபுரத்தில் தாயின் கள்ளக்காதலனை சரமாரியாக குத்தி கொன்ற மகன்களைப் போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் திலீப்குமார். இவரது மனைவி திலகம் (37). இருவரும் சமயபுரம் கோயில் அருகில் பூ வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 5 ஆண் குழந்தைகள்.சேனைய கல்லுக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் பிரபாகரன் (25) என்பவரும் சமயபுரத்தில் பூ வியாபாரம் செய்து வந்தார். தொழில் ரீதியாக பிரபாகரனுக்கும், திலகத்துக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த திலீப்குமார் மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. சில வருடங்களுக்கு முன் மனைவி, குழந்தைகளை விட்டு திலீப் பிரிந்து சென்று விட்டார். 

ஆனாலும் திலகம், பிரபாகரன் தொடர்பு நீடித்தது. இந்த விவகாரம் திலகத்தின் மூத்தமகன் கோவிந்தராஜுக்கு (20)  தெரியவந்தது. அவரும் அவரது தம்பிகளும் பிரபாகரனைக் கண்டித்தனர். நேற்று நள்ளிரவில் பிரபாகரன், சமயபுரம் நால் ரோட்டில் டீ குடிக்க வந்தார். அப்போது அங்கு வந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது சித்தி (திலகத்தின் தங்கை) மகன் சதீஷ் (19) ஆகியோர் பிரபாகரனை தாக்கி சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் பிரபாகரன் அதே இடத்திலேயே இறந்தார். கோவிந்தராஜும், சதீசும் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் நாமக்கல்லில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையொட்டி சமயபுரம் போலீசார் அங்கு விரைந்து உள்ளனர். கோவிந்தராஜ் திருவாரூரில் உள்ள ஒரு கல்லூரியிலும், சதீஷ் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியிலும் படித்து வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.