சந்தானமா வேண்டவே வேண்டாம்: சூரி
சந்தானத்துடன் நடிப்பதற்கு அதிரடியாக மறுப்பு தெரிவித்து வருகிறாராம் சூரி.
முன்னனி ஹிரோவாக இருந்தாலும் கூட அவர்களை கலாய்த்து படத்தில் கைத்தட்டல்களை அள்ளிச்செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் சந்தானம்.
ஹீரோவையே இப்படி கலாய்க்கும் போது ஒரு கொமடியனை எந்த அளவிற்கு கலாய்ப்பார் என்று எண்ணிய சூரி, சந்தானம் நடிக்கும் படத்தில் இரண்டாவது கொமடியனாக நடிக்கும் வாய்ப்புகளை அதிரடியாக மறுத்து விடுகிறாராம் சூரி.
அதோடு இப்பொது எனக்கும் ஒரு மார்க்கெட் உருவாகும் நிலையில் இது தேவைதானா என்று கேட்கிறாராம் சூரி.
சசிகுமார் நடித்திருக்கும் பிரம்மன் படத்தில் சந்தானமும், சூரியும் நடித்துள்ளனர், இதில் கிராமத்திலிருந்து நகரத்திற்க்கு வரும் சசிகுமாருக்கு கிராமத்து நண்பனாக சந்தானமும், நகரத்து நண்பனாக சூரியுமாக நடித்துள்ளார்கள்.
இதில் இருவரும் சேர்ந்து ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லையாம். இதனால் தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் சூரி.

No comments: