யாருக்கும் அழைப்பில்லை : வீட்டுக்குள்ளேயே ‘பதிவுத் திருமணம்’ செய்துகொண்ட மீரா ஜாஸ்மின்!
பிரபல நடிகை மீராஜாஸ்மின் இன்று யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
லிங்குசாமியின் ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீராஜாஸ்மின். தொடர்ந்து விஷாலின் சண்டக்கோழி, நேபாளி, மரியாதை உட்பட சில தமிழ்ப்படங்களில் நடித்தார்.
ஆனால் புதுமுக வரவுகளினால் மீராஜாஸ்மினுக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் குறைந்தன. இதனையடுத்து தனது தாய்மொழியான மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
சர்ச்சைகளுக்கு, கிசுகிசுகளுக்குப் பஞ்சமில்லாத ஹீரோயினான மீராஜாஸ்மின் சில வருடங்களுக்கு முன்பு இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷுடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. இதை அவர் மறுக்கவும் இல்லை.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீராஜாஸ்மினுக்கு கேரளாவைச் சேர்ந்த அனில் ஜான் டைட்டஸ் என்பவருடன் திடீரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. துபாயிலுள்ள பிரபலமான ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அனில் சென்னையில் ’ஐடிஐ’ படித்தவர்.
இவர்கள் திருமணத்துக்கு எல்லோருடைய முன்னிலையிலும் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்றுகாலை திடீரென்று அனிலை எளிய முறையில் மீராஜாஸ்மின் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
கொச்சினிலுள்ள அவரது வைபவ் வீட்டில் சுமார் 11 மணியளவில் ரெஜிஸ்டரை வரவழைக்கப்பட்டு இந்த திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு நடைபெற்றது.
திருமணத்துக்கு தனது உறவினர்களைக் கூட அழைக்க முடியாத சூழ்நிலை வந்ததால் வருகிற 12 ஆம் தேதி அவர்களுக்கும், தனக்கு நெருக்கமான திரையுலகினருக்கும் ஒரு ‘ஸ்பெஷல் மேரேஜ் பார்ட்டி’ ஒன்றை வைக்க ஏற்பாடு செய்திருக்கிறாராம் மீராஜாஸ்மின்.

No comments: