ஐ’ படம் எப்போது ரிலீஸ்? : சிக்கித் தவிக்கும் தயாரிப்பாளரை டென்ஷன் பண்ணும் ‘சீயான்’ விக்ரம்!
விக்ரம் என்ற ஒரு நடிகர் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழும் முன் ஐ படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்பது தான் விக்ரமின் கனவு.
கடந்த சில வருடங்களாக எந்த பெரிய சைஸ் ஹிட்டையும் கொடுக்காத விக்ரம் ராஜபாட்டை, தெய்வத் திருமகள், தாண்டவம், டேவிட் என்று தொடர்ச்சியாக தோல்விப்படங்களை கொடுத்தது தான் மிச்சம்.
பல இளம் ஹீரோக்களும் அடுத்தடுத்து வசூல் சக்கரவர்த்திகளாக கோலிவுட்டில் கோலோச்சும் போது விக்ரமின் இடம் மட்டும் இன்னும் காலியாக இருக்கிறது. கொடுத்த கேரக்டருக்காக தன்னையே வருத்திக்கொள்ளும் விக்ரம் அடுத்த படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இருக்கிறார்.
அதனால் தான் இவருடைய டைரக்ஷன் என்றால் அந்தப்படம் டிலே ஆகும் என்று தெரிந்திருந்தும் கூட ஷங்கரின் ஐ படத்தில் நடிக்க ஓ.கே சொன்னார் விக்ரம்.
மெகா டைரக்டர், மெகா தயாரிப்பாளர், சிறந்த நடிகர் என்று மூன்று பிரபலங்கள் சேர்ந்திருந்தும் கூட கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து, பின் டெக்னிக்கல் வேலைகளை ஆரம்பிக்க வேண்டிய நேரத்தில் ஐ படம் சிக்கல் மேல் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு காரணமே சீயாம் விக்ரம் தானாம். ஏற்கனவே சுமார் 100 கோடிகளை விழுங்கி மலைப்பாம்பி போல விஸ்வரூபம் எடுத்து நிற்கும் ஐ படத்தின் பட்ஜெட்டைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன்.
சொன்ன தேதியில் கரெக்ட்டாக படத்தை ரிலீஸ் செய்து பழக்கப்பட்ட அவருக்கு ஐ படத்தின் ரிலீஸ் தேதியை மட்டும் இன்னும் கணித்துச் சொல்ல முடியவில்லை. அந்தளவுக்கு ஐ படம் கோடிக்கணக்காக பணத்தை தண்ணியாக விழுங்கிக் கொண்டிருக்கிறது.
தயாரிப்பில் இருக்கும் மற்ற சில கோடிகள் பட்ஜெட் படங்களைக் கூட தள்ளி வைத்து விட்டு ஐ படத்தையே கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருக்கும் அவரிடம் பேசிய படி தனது சம்பளத்தை கொடுக்கச் சொல்லி மெண்டல் டார்ச்சல் செய்து வருகிறாராம் விக்ரம்.
இதனால் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கும் வி. ரவிச்சந்திரன் விஷயத்தை டைரக்டர் ஷங்கரிடம் சொல்ல, அவரோ தயாரிப்பாளர் பரிதாப நிலையை உணர்ந்து நானும் ஒரு தயாரிப்பாளர் தான். உங்களோட வேதனை எனக்குப் புரியும் என்று தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறாராம்.
என்னாச்சு சீயான் நல்லமனசோட தானே இருந்தீங்க.., யார் உங்களையும் கெடுத்தது?
.jpg)
No comments: