Header Ads

யாழ்.செம்மணியில் வெட்ட வெளியில் நடக்கும் அந்தரங்க அசிங்கம்

வடக்கில் கலாசாரச் சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. யாழ். குடாநாடு அதில் முந்திக் கொண்டு நிற்கிறது. தமிழ் மக்களைச் சீரழிக்கும் நடவடிக்கைகள் இங்கு சச்சிதமாக நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், இளைஞ்கள் போதைவஸ்து பாவனை, மதுப் பழக்கம் என்பவற்றிலும் இளசுகள் பாலியல் ரீதியில், கலாசாரச் சீரழிவுகளுக்கு ஆளாகி வருகின்றனர். நாகரீகம் என்ற பெயரில் வேறு எத்தனையோ சீரழிவுகள்.

கீழே காட்டப்பட்டுள்ள படங்கள் நல்லூர் செம்மணிப் பகுதியில் எடுக்கப்பட்டவை. செம்மணி புதைகுழி விவகாரம் முன்னர் பிரசித்தமாக இருந்தது. இப்போது அந்தப் பகுதி இளமட்டங்களின் உல்லாசபுரியாக மாறி வருகின்றது. அந்தப் பகுதியில் காலாசாரச் சீரழிவுகளுக்குப் பஞ்சமில்லை.

அங்கு வாகனங்களில் வரும் ஜோடிகள் பகிரங்கமாக வெட்டவெளியில் வெட்கம், கூச்சம் ஏதுமின்றி அந்தரங்கமான விவகாரங்களைப் பகிரங்கமாகச் செய்கின்றனர்.

மதியம் மற்றும் மாலை வேளையில் ஒன்றுகூடும் இளைஞ் கும்பல் வீதியில் நின்றவாறே பகிரங்கமாக மது அருந்துகின்றனர். வீதியால் செல்லும் பெண்களுக்கு மது போதையில் நின்றவாறு மதுப் போத்தல்களைக் காட்டி ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். இதனால் இவ் வீதியால் பகலில் கூட பெண்கள் தனியாகப் பயணம் செய்ய அஞ்சுகின்றனர்.

இதேவேளை மதிய வேளைகளில் ஓட்டோ, ஹைஏஸ் வாகனங்களில் வரும் சிலர் அந்தரங்கச் செயங்களைப் பகிரங்கமாகச் செய்கின்றனர்.

கடந்த வாரம் ஓட்டோ ஒன்றில் வந்த ஜோடி ஒன்று தகாத செயலில் ஈடுபட முயன்ற வேளை வீதியால் வந்த பயணிகள் சிலரால் அடித்துத் துரத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இளைஞர், யுவதிகள் மயானங்களை இழி செயல்களுக்குப் பயன்படுத்துவது பெரும் வேதனையளிப்பதாக முதியவர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் பொலிஸ் மட்டுமல்லாது அந்தப் பிரதேச மக்கள் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து இவர்களைப் பிடித்து நீதிமன்றம் ஊடாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.