பிரபல பாடகியுடன் ஒபாமா காதலா?.... பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்....
அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவும், பிரபல பொப் பாடகி பியான்சும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்துக்கும், நடிகை ஜூலியட் கேயட்டுக்கும் இடையேயான ரகசிய உறவுகள் அம்பலமாகின.
இந்நிலையில் பிரெஞ்சு போட்டோகிராபர் வெளியிட்டுள்ள படங்களை வைத்து பிரெஞ்ச் மீடியாக்கள் ஒபாமாவுக்கும், பியானஸ்க்கும் இடையே காதல் என வதந்தியை கிளப்பி உள்ளன.
அமெரிக்க செய்தி நிறுவனமும் இதேபோன்றதொரு செய்தியை வெளியிட்டுள்ளது. ஒபாமாவுக்கும், பியாயோன்சுக்கும் இடையே 20 வருட வயது வித்தியாசம் உள்ளது.
ஒபாமாவும் அவரது மனைவி மிக்ஷேல் ஒபாமாவும் தங்களது 21வது திருமண நாளை சமீபத்தில் தான் வெகு சிறப்பாக கொண்டாடினர், இந்த விழாவில் பியாயோன்சும் கலந்து கொண்டார்.

No comments: