நஸ்ரியாவுக்காக ஸ்கிரிப்ட் மாற்றிய இயக்குனர்
சென்னை: நஸ்ரியாவுக்காக கூடுதல் காட்சிகள் சேர்த்து ஸ்கிரிப்ட் மாற்றினார் இயக்குனர். ‘நய்யாண்டிÕ ஹீரோயின் நஸ்ரியா நாசிம் மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலை மணக்க உள்ளார். இதையடுத்து புதிய படங்கள் ஒப்புக்கொள்வதை குறைத்துக்கொண்டு வருகிறார். இந்நிலையில் விக்ரம் பிரபு ஜோடியாக ‘தலப்பாக்கட்டிÕ என்ற படத்தில் நடிக்க அவரது கால்ஷீட் கேட்டு அணுகினார் இயக்குனர் சத்யசிவா. இப்படம் மலையாளத்தில் நித்யா மேனன் நடத்து வெளியான ‘உஸ்தாத் ஓட்டல்‘ படத்தின் ரீமேக் ஆகும். ஆனால் நஸ்ரியா நடிக்க தயக்கம் காட்டினார். அவருக்காக படத்தின் ஸ்கிரிப்ட்டை மாற்றியதையடுத்து ஒப்புக்கொண்டார்.
இதுபற்றி இயக்குனர் கூறும்போது,‘முதலில் இப்படத்தை ஏற்பதற்கு நஸ்ரியா தயங்கினார். ஒரிஜினல் கதையில் நித்யா மேனனுக்கு நடிப்பதற்கு நிறைய காட்சிகள் கிடையாது. ஆனாலும் அவர் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதைவிட சிறப்பாக என்னால் தமிழ் ரீமேக்கில் நடித்துவிட முடியாது என்று நஸ்ரியா கூறினார். ஆனால் அவருக்காக ஸ்கிரிப்டை காதல் பின்னணியுடன் மாற்றியதுடன், ஹீரோயினுக்கு நிறைய நடிக்க வாய்ப்புள்ள காட்சிகளை இணைத்தேன். அக்கதையை சொன்னபிறகே நடிக்க ஒப்புக்கொண்டார்Õ என்றார்.

No comments: