Header Ads

டுவிட்டரில் கிளுகிளுப்பான மெசேஜ் நடிகைக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் -

சென்னை: டுவிட்டரில் கிளுகிளுப்பான மெசேஜ் போட்ட நடிகைக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். சமீபகாலமாக பெரும்பாலான நடிகர், நடிகைகள் இணைய தள பக்கங்கள் மூலம் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். சிலவற்றுக்கு வரவேற்பு கிடைக்கும் அதேவேளையில் இன்னும் சில, அவர்களை பிரச்னையில் சிக்க வைத்துவிடுகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த பட போஸ்டர் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருந்த சமந்தா சமீபத்தில் பிரச்னையை சந்தித்தார். மகேஷ்பாபு, அவரது ரசிகர்கள் சமந்தாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல் ‘யுவன் யுவதிÕ பட ஹீரோயின் ரீமா கல்லிங்கல் தற்போது பிரச்னையில் சிக்கி இருக்கிறார். 

சமீபத்தில் கணவர் ஆஷிக் அபுவுடன் கடற்கரைக்கு சென்றவர் அங்கு அவருடன் நெருக்கமாக இருந்ததாக இணைய தள பக்கத்தில் வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார். இந்த ட்விட்டை கண்டித்து ஏராளமான ரசிகர்கள் மெசேஜ் போட்டிருக்கின்றனர். அதைக்கண்டு ஷாக் ஆன ரீமா தனது மெசேஜுக்கு உடனடியாக விளக்கம் அளித்தார். ÔÔஇதற்கு ஆபாசமாக பொருள் கொள்ளக்கூடாது. மதுபானம் குடித்து, அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அதைத்தான் அப்படி சொல்லி இருந்தேன்ÕÕ என எஸ்கேப் ஆகும்படி விளக்கம் அளித்திருக்கிறார். அத்துடன் கையில் மது கோப்பையுடன் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

No comments:

Powered by Blogger.