Header Ads

என்னை தாக்கியவர் மீது நடவடிக்கை இல்லை: கோலி சோடா நடிகை குமுறல்

சென்னை: தன்னை தாக்கியவர் மீது 4 மாதமாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோலி  சோடா படத்தில் நடித்த நடிகை குற்றம் சாட்டினார். கோலி சோடா, மாத்தி யோசி, சபரிகாடு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரேணுகா. இவர்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். பின்னர், அவர் நிருபர்களிடம்  கூறியதாவது: சேப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் ஜானகி ராமன்  நல்லவர். அவரது தம்பி மனைவி எங்களை வீட்டை விட்டு காலி செய்ய பல முயற்சிகள் செய்து வரு கிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன் என் மீது தாக்குதல் நடத்தினார். 

என் பெற்றோர் மீதும் தாக்குதல்  நடத்தது. இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தோம். இதுவரை 4 முறை புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை  எடுப்பார் என்று நம்பி இங்கு வந்தோம். தற்போது, திருவல்லிக்கேணி துணை கமிஷனரிடம் புகார்  அளிக்கும்படி கமிஷனர் அலுவலக போலீசார் எங்களை அனுப்பி உள்ளனர். இனியாவது நடவடிக்கை  எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

No comments:

Powered by Blogger.