Header Ads

பலாத்கார வழக்கில் தேஜ்பால் மீது குற்றப்பத்திரிகை

பனாஜி: பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் மற்றும் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில்  தெகல்கா ஆசிரியர் தேஜ்பால் மீது கோவா போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தெகல்கா ஆசிரியர் தேஜ்பால் கடந்த ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் கோவா மாநிலம்  பனாஜியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் பத் திரிகையாளர் கோவா போலீசில் புகார் கூறினார். இதையடுத்து, கோவா போலீசார் தேஜ்பாலை கைது  செய்து வாஸ்கோ நகரில் உள்ள சாடா சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணை  செய்த அதிகாரி சுனிதா சவாண்ட், தேஜ்பால் மீது 354, 354-ஏ, 341 மற்றும் 342, 376, 376(2)(எப்)  மற்றும் 376(2) (கே) ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டினார்.

தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி அனுஜா பிரபு தேசாய் முன்னிலையில் 2684 பக்கங்கள் கொண்ட  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாள ர், தெகல்காவின் ஊழியர்கள் உட்பட 152 சாட்சிகள் விசாரனை செய்யப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகையி ல், ‘தேஜ்பால் செய்த குற்றத்தை நிரூபிப்பதற்கான போதுமான அறிக்கைகள் ஆவணங்களாக  பதிவாகியுள்ளன. மேலும், தேஜ்பால் மன்னிப்பு கேட்ட இமெயில் கடிதங்களும் ஆதாரமாக உள்ளன’ எ ன்று விசாரணை அதிகாரி கூறியுள்ளார். ஷ்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிற து.

No comments:

Powered by Blogger.