Header Ads

சந்திரமுகி’ 2–ம் பாகத்தில் நடிக்க ரஜினி பரிசீலனை?

ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா இணைந்து நடித்து 2005–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் 'சந்திரமுகி'. தமிழகத்தில் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியது. வசூலும் குவித்தது. இப்படத்தை பி.வாசு இயக்கினார்.
தற்போது சந்திரமுகியின் 2–ம் பாகம் தயாராகுமா? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. இதற்கான கதையை பி.வாசு தயார் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.
ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்துக்கு பின் அடுத்து ரஜினி நடிக்கப் போகும் படம் எது என்று அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. கே.வி.அனந்த், அல்லது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிப்பார் என பேச்சு அடிபடுகிறது. 
இந்த நிலையில் பி.வாசுவும், சந்திரமுகி படத்தின் 2–ம் பாகத்தை ரஜினியை வைத்து இயக்க ஆர்வம் காட்டுகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது ரஜினி நடித்தால் மட்டுமே சந்திரமுகி 2–ம் பாகத்தை தமிழில் இயக்குவேன். இல்லாவிட்டால் அப்படத்தை எடுக்க மாட்டேன் என்றார். 
சந்திரமுகி 2–ம் பாகத்தில் நடிப்பது குறித்து ரஜினி பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கதையை கேட்டு விட்டு முடிவை அறிவிப்பார் என தெரிகிறது. டைரக்டர் பி. வாசு அழைப்பை ஏற்று சந்திரமுகி 2–ம் பாகத்தில் ரஜினி நடிப்பாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.   

No comments:

Powered by Blogger.